அரச ஆதரவு படைகள் யெமனின் தென் மாகாணத்தை மீளக் கைப்பற்றியுள்ளன.

சனிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2015
அறபு கூட்டணி ஆதரவுடன் இயங்கும் அரசாங்க ஆதரவுப் படைகள் யெமனின் ஐந்தாவது மாகணமான தென்மாகாணத்தை சனிக்கிழமையன்று மீளக் கைப்பற்றியுள்ளன என இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் ஈரானின் பின்புலத்துடன் இயங்கும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னேறிக் கொண்டு செல்கின்றனர்.
கிளர்ச்சியாளர்கள் "சப்வா" எனும் அந்த மாகாணத்தினை விட்டு பின்வாங்கியுள்ளதுடன் அதனை அரச ஆதவுப் படைகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளனர் என ஒரு இராணுவ அதிகாரி ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்திருந்தார். இதனை ஏனைய இராணுவ அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளதுடன் கிளர்ச்சியாளர்கள் துரத்தியடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
** alarabiya.net **