தமிழ் ஷீஆ
Visit us on:
  • முகப்பு
  • ஆவணங்கள்
    • வீடியோ
    • ஆடியோ
    • புகைப்படங்கள்
    • நூல்கள்
  • செய்திகள்
  • கருத்துக்கள்
  • ஆக்கங்கள்
  • கேள்வி - பதில்

தாயிஸ் பிரதேசம் அடுத்த இரண்டு தினங்களுக்குள் விடுவிக்கப்படும்

Picture
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2015

யெமனின் தாயிஸ் பிரதேசத்தில் யெமன் இராணுவமும் மக்கள் படையணியும் இணைந்து மும்முனைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், அடுத்த இரண்டு தினங்களுக்குள் தாயிஸ் பிரதேசத்தை ஹூதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து முழுமையாக விடுவிக்க முடியும் எனவும் எமனின் உட்துறை அமைச்சர் மேஜர் ஜெனரல் அப்தூ முஹம்மத் அல்-ஹுதைபி வெள்ளியன்று தெரிவித்தார்.

அல் அரேபிய செய்திச் சேவையின் துணை ஒளிபரப்பு நிலையமான அல் ஹதாதிற்கு கருத்து தெரிவித்த ஹுதைபி அவர்கள் – 75 வீதத்துக்கும் அதிகமான தாயிஸ் பிரதேச மக்கள் சட்டரீதியான அரசாங்கத்தை உணர்ந்து கொண்டுள்ளதாகவும், ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சாலிஹின் படைகள் ஆகியோர் வருவதை நிராகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது மும்முனை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு முன்னரங்க நிலைகள் ஊடாக தாக்குதல் நடத்தப்பட்டுவருகின்றது. ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்று சாலிஹின் படையினர் ஆகியோர்  கிழக்கு பகுதியில் அவர்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முனைகின்ற போதிலும் கிளர்ச்சிக் குழுக்களுக்கிடையே காணப்படுகின்ற குழப்பம், மற்றும் சிதைவு காரணமாக அவர்கள் மெதுமெதுவாக பின்வாங்கி வருவதாகவும் ஹுதைபி அவர்கள் அல் ஹதாத் தொலைக்காட்சி சேவைக்கு தெரிவித்தார்.

அடுத்துவரும் இரண்டு நாட்களுக்குள் தாயிஸ் பிரதேசம் முழுமையாக விடுவிக்கப்பட்டுவிடும் என ஹுதைபி எதிர்வு கூறியுள்ளார்.

alarabiya.net

Powered by Create your own unique website with customizable templates.