தமிழ் ஷீஆ
Visit us on:
  • முகப்பு
  • ஆவணங்கள்
    • வீடியோ
    • ஆடியோ
    • புகைப்படங்கள்
    • நூல்கள்
  • செய்திகள்
  • கருத்துக்கள்
  • ஆக்கங்கள்
  • கேள்வி - பதில்

யெமன் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் அழைக்கப்படாது – சஊதி தூதுவர் உத்தரவாதம்

Picture
மே மாதம் 28ம் திகதி ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சண்டையிடும் யெமனிய கட்சிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு ஈரான் அழைக்கப்பட மாட்டாது என அவரால் உத்தரவாதப்படுத்த முடியும் ஐக்கிய நாடுகளுக்கான சஊதி தூதுவர் அப்துல்லாஹ் அல்-முஅலாமி புதன் கிழமையன்று தொிவித்தார்.

யெமன் மற்றும் கட்டார் பிரதிநிதிகளுடனான கூட்டத்தின் பின் பத்திாிகையாளர்களுடன் பேசிய முஅலாமி, ஈரான் இதற்கு அழைக்கப்படக்கூடாது என்பதில் அவர்கள் அனைவரும் இணங்கியுள்ளதாக தொிவித்தார்.

அத்துடன் ஹூதிக்கள் சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அப்த்றப்பு மன்சூர் ஹாதி அவர்களின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சதி செய்தார்கள், மற்றும் கடந்த வாரம் மனிதாபிமான யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்ட ஐந்து நாட்களிலும் சஊதி மீது இலக்கு வைத்து 74 தாக்குதல்களை நடாத்தினார்கள் என தூதுவர் அவர்கள் ஹூதி கிளர்ச்சியாளர்களை குற்றம் சாட்டினார்.

அத்துடன் மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் யுத்த நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினால் சஊதி அரேபியா யுத்த நிறுத்தத்தினை புதுப்பிக்க தயார் என்று மேலும் அவர் தொிவித்தார்.

எவ்வாறெனினும் யுத்த நிறுத்தத்தினை புதுப்பிப்பதாக இருந்தால் சஊதி இராணுவ தலைவர்கள்தான் இறுதி முடிவினை எடுப்பவர்களாக இருப்பார்கள் என முஅலாவி தொிவித்தார்.



alarabiya.net (20.05.2015)


Powered by Create your own unique website with customizable templates.