Al-Arabiya (13.05.2017)
லெபனானை தலைமைகயமாகக் கொண்டு செயற்பட்டு வரும் ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாத குழுவின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஸிரியாவில் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் பல வருடங்களாக ஸிரியாவில் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த அமைப்பிற்கு நெருக்கமான தகவல்களின் படி களமுனைத் தளபதிகளான அலி மாமெத் பெஸ் மற்றும் ஹஸன் ஸமா ரசீத் ஆகிய இருவரே ஸிரியாவில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இவர்கள் எப்போது எந்த இடத்தில் கொல்லப்பட்டார்கள் என்கின்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஸிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிந்திய கணக்கெடுப்பின் படி ஸிரிய யுத்தத்தில் இதுவரை 1,500க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை கொல்லப்பட்டுள்ள ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாதிகளின் உத்தியோகபூர்வ புள்ளிவிபர தகவல்கள் இல்லை.