Al-Arabiya (07.01.2017)
சவுதி அரேபியாவின் எல்லை நகரமான ஜஸான் பிராந்தியத்திற்குள் ஊடுருவ முயன்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபிய படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் குறைந்தது 20 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் டஸன் கணக்கான கிளர்ச்சியாளர்கள் காயமடைந்துள்ளதாக சவுதி இராணுவ தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
யெமன் எல்லையிலிருந்து தாக்குதல்களை மேற்கொண்ட ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபிய பீரங்கி படையினர் பலத்த பதில் தாக்குல்களை மேற்கொண்டனர்.
அதேவேளை யெமன் எல்லையிலுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஆயுத களஞ்சியங்கள் மற்றும் அவர்களின் பலப்பிரதேசங்கள் மீது அரபு கூட்டுப்படை விமானங்கள் தாக்குதல்களை மேற்கொண்டு கிளர்ச்சியாளர்களுக்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.