Visit us on:
  • முகப்பு
  • ஆவணங்கள்
    • வீடியோ
    • ஆடியோ
    • புகைப்படங்கள்
    • நூல்கள்
  • செய்திகள்
  • கருத்துக்கள்
  • ஆக்கங்கள்
  • கேள்வி - பதில்

​அலெப்போவினை அடுத்து, நாம் பஹ்ரைன் மற்றும் யெமனில் தலையிடுவோம் – ஈரான்.

17/12/2016

Comments

 
Picture
Al Arabiya (16.12.2016)

பஹ்ரைன் மற்றும் யெமன் மீது தலையிடுவோம் என அச்சுறுத்தி வளைகுடா நாடுகளுக்கு எதிராக கோபமூட்டும் அறிக்கை ஒன்றினை ஈரான் புட்சிகர படையின் தளபதி விடுத்துள்ளார்.

ஸிரியாவின் அலெப்போவில் பொதுமக்கள் மீதான மாபெரும் மனிதப்படுகொலைகள், பட்டிணி போட்டு கொலைசெய்தமை, மற்றும் சொந்த இடங்களை விட்டும் அகதிகளாக துரத்தியமை ஆகியவைகளை செய்துவிட்டு “அலெப்போவில் வென்றுவிட்டோம்”  என ஊடகங்களுக்கு அறிக்கை விடுகின்றார்.

இதேவேளை, ஈரானிய புரட்சிகர இராணுவத்தின் பிரதி கட்டளைத்தளபதி ஜெனரல் ஹுஸைன் ஸலாமி ஈரானின் உத்தியோகபூர்வ செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் அலெப்போ மீதான வெற்றியானது பஹ்ரைனை விடுவிப்பதற்கு வழிவகுக்கும் எனவும், ஸிரியாவின் அலெப்போ நகரம் வீழ்ச்சியடைந்த பிறகு பஹ்ரைன், யெமன், மறறும் ஈராாக்கின் மொசூல் ஆகியவற்றின் மீது தலையிட்டு அங்கு பரந்துபட்ட திட்டத்தினை ஈரான் நடைமுறைப்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அதன் பிறகு “பஹ்ரைன் மக்கள் அவர்களின் விருப்பத்தினை அடைந்துகொள்வார்கள், யெமன் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள், அத்துடன் மொசூல் மக்கள் வெற்றியை சுவைப்பார்கள், இவைகள் அனைத்தும் இறைவனின் வாக்குறுதிகளாகும்” என ஜெனரல் ஸலாமி மேலும்  தெரிவித்தார்.

அத்துடன் யெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் எண்ணற்ற உதவிகளை தொடர்ந்தும் வழங்கிவருவதாக சுட்டிக்காட்டிய அவர், எப்பிரதேசத்திலுமுள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கியழிக்கும் வகையில் ஈரானின் ஏவுகணைகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
​
ஆயிரக்கணக்கான பொதுமக்களில் உயிர்களை பலியெடுத்துவிட்டு ஸிரியாவின் அலெப்போ நகரினை ஸிரிய அரசபடைகள் ஈரான் மற்றும் ஏனைய ஷீஆ படைகள் மற்றும் ரஸ்யாவின் உதவியுடன் கைப்பற்றியிருப்பதனை ஒரு “வெற்றி” என ஸலாமி விபரித்திருப்பதுடன், இவ்வாறே பஹ்ரைன், யெமன் ஆகியவற்றிலும் தலையீடு செய்து அங்கு இருக்கும் முஸ்லிம்களை அழித்துவிட்டு வெற்றியினை அறிவிப்போம் என்பதாகவே இவர்களின் கூற்றுக்கள் அமைந்திருக்கின்றன.
Comments
Powered by Create your own unique website with customizable templates.