Al-Arabiya (30.12.2016)
யெமன் – சவுதி எல்லையருகே ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப் படையினரின் இலக்குகள் மீது அரபு கூட்டடுப்படை விமானங்களின் உதவியுடன் சவுதி படைகள் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
சவுதி அரேபியாவின் எல்லையோர நகரமான நஜ்ரானில் அமைந்துள்ள சவுதி இராணுவ கட்டுப்பாட்டு மையத்தின் மீது தாக்குதல் நடாத்தும் நோக்கில் நகர்வுகளை மேற்கொண்ட ஹூதி கிளர்ச்சியாளர்களின் வாகனங்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப்படை அணியினர் மீது ஜஸான் மாகாணத்திற்கு அப்பால் வைத்து சவுதி படையினர் விமானத் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
சவுதி எல்லையின் மீது தாக்குதல்களை மேற்கொண்ட கிளர்ச்சியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 12 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர் எனவும், பாரிய இழப்புக்களுடன் கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கிச் சென்றதாகவும் சவுதி பாதுகாப்பு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.