Alekhbariya (05.10.2016)
யெமனின் தாயிஸ் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மோதலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப் படையினைச் சேர்ந்த 12 பேர் யெமன் இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அதேவேளை, தாயிஸிலுள்ள யெமன் இராணுவத்தின் பேச்சாளர் கேனல் மன்சூர் அல்-ஹஸ்ஸானி தகவல் தெரிவிக்கையில், யெமன் அரச படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையே நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த சண்டையை தொடர்ந்து தாயிஸின் தென் பகுதியை யெமன் இராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் கிளர்ச்சியாளர்களுக்கும் யெமன் இராணுவத்தினருக்கும் இடையே தாயிஸின் மேற்கு பகுதியில் இடம்பெற்ற சண்டையில் கிளர்ச்சியாளர்களுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.