
Arabiya (18.07.2016)
பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற 25வது ஐரோப்பிய யூனியன் - வளைகுடா ஒத்துழைப்பு கவுன்ஸிலின் இணைந்த கூட்டத்தொடரின் பின் ஐரோப்பிய யூனியனின் வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற இணைந்த பத்திரிகையாளர் மாநாட்டின் போது பேசிய சஊதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் ஆதில் அல்-ஜுபைர், ஸிரிய பிரச்சினையை தீர்ப்பதற்கு நிரந்தரமான ஒரு தீர்வினை காணும்வரை ஸிரியாவின் எதிர்க்கட்சி போராளிகளுக்கான எமது ஆதரவு தொடரும் என தெரவித்ததுடன், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்திற்கும் சஊதி அரேபியாவின் ஆதரவு தொடரும் என வலியுறுத்தி தெரிவித்தார்.
மறுபக்கம், யெமன் பிரச்சினைக்கான தீர்வென்பது சர்வதேச தீர்வுத் திட்டங்களை அடிப்படையாக கொண்டதாக அமைய வேண்டும் என தெரிவித்த அவர், இதற்காக நாம் யெமனுக்கான ஐ.நா. தூதுவருடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை யெமனின் மனிதாபிமான நிலைமைகள் எங்களுக்கு கவலையளிப்பதாக தெரிவித்த அவர் அதனை மீளக்கட்டியெழுப்புவதற்கும் நாம் பாடுபடுவோம் எனவும் தெரிவித்தார்.