Arabnews (28.10.2016)
புனித மக்கா நகரினை நோக்கி கடந்த வியாழன் இரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலினை சவுதி படையினர் இலக்கினை அடைய முன்னர் தாக்கியழித்தனர். எனினும் ஹூதி கிளர்ச்சியாளர்களின் குறித்த தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து செயற்படும் ஈரான் மீது பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக யெமன் வெளிவிவகார அமைச்சர் அப்துல் மலிக் அல்-மிக்லாபி தெரிவித்துள்ள அறிக்கையில், நாங்கள் சமாதானத்தினை தேடுகின்றோம், அவர்கள் யுத்தத்தினை தேடுகின்றார்கள். நாங்கள் யெமனிலும் மற்றும் பிராந்தியத்திலும் உறுதிப்பாட்டை தேடுகின்றோம், அவர்கள் அழிவினையும், தேசத்துரோகத்தினையும் தேடுகின்றனர். அவர்கள் உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதையே இது மீள் உறுதிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.
இந்த பொறுப்பற்ற செயலானது ஹூதி கிளர்ச்சியாளர்களின் உண்மை முகத்தினை தோலுரித்துக் காட்டியுள்ளதுடன், பிரிவினைவாத மோதலினை தூண்டுவதற்கு ஈரானே இவர்களுக்கு பின்புலமாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உறுதியாகின்றது என யெமன் அரசாங்க அதிகாரி ஒருவர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன் ஹூதிக்களின் இந்த பொறுப்பற்ற தாக்குதலானது அரபுக்கள், மற்றும் அனைத்து முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்களின் புனித தலங்களை அழிக்கும் பாரசீக திட்டத்திற்கு துணைபோகும் செயலை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச் செயலானது உலகிலுள்ள ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் உணர்வுகளை கோபமூட்டும் செயற்பாடாகும் என சூறா கவுன்ஸில் சபாநாயகர் அப்துல்லாஹ் அல்-அஷ்ஷெய்க் தெரிவித்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு பின்னால் இருக்கும் யாராக இருந்தாலும் அவர்களை உலக முஸ்லிம்கள் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.