Arabiya (13.08.2016)
யெமனின் சஆதா பிரதேசத்திலுள்ள கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அரபு கூட்டணி படைகள் சனிக்கிழமையன்று மேற்கொண்ட விமானத் தாக்குதல்களில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் பயிற்சி முகாம் ஒன்று முற்றாக தாக்கியழிக்கப்பட்டதுடன், ஹூதி கிளர்ச்சியாளர்களின் தலைவர்களுள் ஒருவரான அபூ யஹ்யா என்பவர் கொல்லப்பட்டதுடன், மேலும் பல கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அரப் செய்தித் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அதேவேளை தாயிஸ் மாகாணத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் யெமன் மக்கள் படையினரிடையே இடம்பெற்ற பலத்த சண்டையில் ஹூதி மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப்படையினைச் சேர்ந்த 09 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும், பாரிய சேதங்களுடன் கிளர்ச்சியாளர்களை பின்வாங்கச் செய்து யெமன் மக்கள் படையினர் குறித்த பிரதேசத்தில் முன்னேறியுள்ளதாகவும் களமுனைத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.