
Arabiya (18.05.2016)
மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஈரான் செயற்பட்டு வருவதன் காரணமாக ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்வதாக மாலைதீவு செவ்வாயன்று அறிவித்துள்ளது.
மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளமான ட்விட்டரில் செவ்வாயன்று மாலை பதிவிட்டுள்ளதாவது “ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொள்வதாக மாலைதீவு அரசாங்கம் அறிவித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளதாக அனடோலியா செய்தி முகவரகம் தெரிவித்தள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் சமாதானத்திற்கு தீங்குவிளைவிக்கும் வகையில் ஈரான் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
தெஹ்ரானிலுள்ள சஊதி அரேபிய தூதரகம் தாக்கப்பட்டு தீ வைத்து கொழுத்தப்பட்டமையை அடுத்து சஊதி அரேபியா ஈரானுடனான உறவினை துண்டித்தமையை அடுத்து வளைகுடா மற்றும் ஈரானுக்கிடையிலான உறவுகளில் காணப்படுகின்ற பதற்ற நிலைமையை தொடர்ந்து மாலைதீவும் ஈரானுடனான உறவுகளை துண்டித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் குவைட் ஆகிய நாடுகள் ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொள்வதாக அறிவித்து தமது தூதுவர்களை திருப்பி அழைத்தமை குறிப்பிடத்தக்கது.