
Arabiya (11.05.2016)
குவைட்டில் இடம்பெறும் யெமன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் பாரிய இராணுவ நடவடிக்கையுடன் யெமன் அரசாங்கம் சன்ஆவுக்குள் நுழையும் என சஊதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகளின் பேச்சாளர் பிரிகேடியர் அஹ்மத் அஸீரி தெரிவித்தார்.
எகிப்தின் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அஸீரி இந்த கருத்தினைத் தெரிவித்தார். அரசியல் ரீதியான தீர்வொன்றினை எட்டுவதற்கே யெமன் சமாதான பேச்சுவார்தை குவைத்தில் இடம்பெறுகிறது. சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துவிட்டன என ஐ.நா. அறிவித்தால் யெமனின் சட்டபூர்வ அரசாங்கம் இராணுவ ரீதியான தலையீடுகளை ஆரம்பிக்கும் என அவர் தெரிவித்தார்.
யெமனில் கூட்டுப்படைகளின் தலையீடு என்பது யெமன் பிரஜைகளை பாதுகாப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது எனவும், எந்தவொரு அரச வளங்களையும் எதிர்பாாத்து மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பு அல்ல எனவும் அஸீரி மேலும் தெரிவித்தார்.