Visit us on:
  • முகப்பு
  • ஆவணங்கள்
    • வீடியோ
    • ஆடியோ
    • புகைப்படங்கள்
    • நூல்கள்
  • செய்திகள்
  • கருத்துக்கள்
  • ஆக்கங்கள்
  • கேள்வி - பதில்

​ஷீஆக்களின் 12வது இமாமான மஹ்தி வந்தால்அவர் செய்யப்போவது என்ன?

15/1/2016

Comments

 
Picture
தங்களின் பன்னிரண்டாவது இமாமான மஹ்தி வந்தால் சில வேலைகளைச் செய்ய இருப்பதாக ஷீஆக்கள் குறிப்பிடுகின்றனர். இந்த அறிவிப்புக்களை முழுமையாகப் பார்த்தால் ஷீஆக்கள் சொல்லும் மஹ்தி ஒரு யூதனாக இருக்க வேண்டும் அல்லது தஜ்ஜாலாக இருக்க வேண்டும். மூன்றாம் நபராக இருக்க முடியாது என்பது தெளிவாகின்றது. இதை நீங்களும் தெளிவாக அறிந்துகொள்ள அது தொடர்பாக அவர்களின் நூல்களில் வந்திருக்கும் அறிவிப்புகள் சிலவற்றைப் பாருங்கள்.
 
01. அபூபக்ர், உமர், ஆயிஷா (ரழி) போன்றவர்களைப் பழிவாங்கல்:
எதிர்பார்த்திருக்கும் மஹ்தி வந்தால் அபூபக்ரையும், உமரையும் உயிர்ப்பிப்பார். பின்பு அவர்கள் இருவரையும் ஈத்தம் குற்றியிலே அறைவார். பின்பு ஒவ்வொரு நாளும் அவர்கள் இருவருக்கும் ஆயிரம் கசையடிகளை வழங்குவார். (ஈகாழும் மினல் ஹஜ்ஆ)

ஷீஆக்களின் முக்கியமான அறிஞர் மஜ்லிஸி என்பவர் குறிப்பிடுகின்றார்: ‘‘எதிர்பார்க்கப்படும் மஹ்தி வந்தால் ஆயிஷாவை உயிர்ப்பிப்பார். அவருக்கு விபச்சாரத்திற்கான தண்டனையை வழங்குவார்.’’ (ஹக்குல் யகீன்)

02. அரேபியர்களைக் கொலை செய்வார்:
ஷீஆக்களின் இமாம்களில் ஒருவர் சொல்கிறார்: ‘‘எங்களுக்கும் அரேபியர்களுக்கும் மத்தியில் (அவர்களைக்) கொலை செய்வதைத் தவிர வேறெதுவும் இல்லை.’’ (பிஹாருல் அன்வார்)

“அரேபியர்கள் பயந்துகொள்ளட்டும் (எங்கள் மஹ்தி வந்தால்) நிச்சயமாக அவர்களுக்கு மோசமான ஒரு செய்தி காத்திருக்கிறது.’’ (பிஹாருல் அன்வார்)

03. ஹஜ்ஜாஜிகளை கொலை செய்வார்:
மஹ்தி வந்தால் அவர் ஸபா மர்வாவுக்கு இடையில் ஹஜ்ஜாஜிகளை கொலை செய்வார் என்று பிஹாருல் அன்வார் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் என்னவோ இமாம்களின் பிரதிநிதிகள் என்று சொல்லப்படும் குழுவாக இவர்களது அறிஞர்கள் இருப்பதால், கொமைனியின் ஆட்சியில் மக்காவில் குண்டுகளை வைப்பதற்காக ஹி.1407ல் குண்டுகள் கொண்டுவரப்பட்டபோது அது பிடிபட்டது. பின்பு ஹி1409ல் மக்காவின் சில இடங்களில் ஷீஆக்களினால் குண்டுகள் வைக்கப்பட்டன. சில ஹஜ்ஜாஜிகள் இதனால் பாதிக்கப்பட்டனர்.

04. மக்கா பள்ளிவாயல், மதீனா பள்ளிவாயல், நபியவர்களின் அறை என்பவற்றை உடைத்தல்:
‘‘நிச்சயமாக மஹ்தி வந்தால் மஸ்ஜிதுல் ஹராத்தை (மக்காப் பள்ளியை) உடைப்பார், மேலும் மதீனாப் பள்ளிவாயலையும் உடைப்பார்’’ (தூஸி என்பவருக்குரிய அல்கைபா என்ற நூல்)
​

ஷீஆக்களின் மஹ்தி சொல்வதாக சொல்கிறார்கள்: ‘‘நான் வந்தால் யத்ரிபுக்கு (மதீனாவுக்கு) செல்வேன். நபியவர்களின் அறையை உடைப்பேன்.’’ (பிஹாருல் அன்வார்)

05. தாவூதின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவார்:
தற்போது யூதர்கள் தாவூதின் சட்டங்களைப் பின்பற்றுவதாகச் சொல்கின்றனர், ஆனால் முஸ்லிம்கள் முஹம்மது (ஸல்) அவர்களின் சட்டங்களைப் பின்பற்றுகின்றனர். ஷீஆக்கள் எதிர்பார்த்திருக்கும் மஹ்தி வந்தால் அவர் தாவூதின் சட்டங்களைத்தான் நடைமுறைப்படுத்துவாராம்.

06. நபி(ஸல்), அலி(ரழி), ஹஸன்(ரழி), ஹுஸைன்(ரழி) அவர்கள் போன்று அவர் நடக்கமாட்டார்:
“நிச்சயமாக அலியும், ஹுஸைனும் நபியவர்களின் வழிமுறையைப் பின்பற்றினர், நிச்சயமாக நபியவர்கள் இந்த சமுதாயத்திற்கு அருளாக அனுப்பப்பட்டார்கள் ஆனால் மஹ்தி இந்த சமுதாயத்திற்கு தண்டனையாக அனுப்பப்படுவார்.’’ (பிஹாருல் அன்வார்)
 
ஷீஆக்களின் இமாம்களில் ஒருவரிடத்தில் மஹ்தி நபியவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்: இல்லை நபியவர்கள் மன்னிப்பு இரக்கம் என்பவற்றைப் பின்பற்றினார்கள் என்று கூறினார்.  (பிஹாருல் அன்வார்)

07. வாரிசுரிமை மாற்றப்படும்:
ஒருவர் மரணித்ததன் பின்பு அவரின் குடும்பத்தார் அவரின் சொத்துக்கு அனந்தரக்காரர்களாக மாறுகின்றனர். அவர்கள் வாரிசுகள் என்றும், அவர்களுக்கு அந்த சொத்திலிருந்து கிடைக்கவேண்டிய பகுதி அவர்களின் உரிமையாகவும் கருதப்படுகின்றது.
 
ஆனால், ஷீஆக்கள் எதிர்பார்த்திருக்கும் மஹ்தி வந்தால் இந்த முறை மாற்றப்படும் என்பது ஷீஆக்களின் நூல்கள் குறிப்பிடுகின்ற கருத்தாகும்: ‘‘அல்லாஹ் மனிதர்களைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உயிர்களுக்கு மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினான். மஹ்தி வந்தால் பிறப்பின் மூலம் வந்த சகோதரர்கள் அன்றி அல்லாஹ் ஏற்படுத்திய சகோதரர்களே அனந்தரச் சொத்தைப் பெறுவார்கள்.’’ (அல்இஃதிகாதாத்)

Comments

    Archives

    January 2017
    September 2016
    August 2016
    July 2016
    June 2016
    May 2016
    April 2016
    March 2016
    February 2016
    January 2016
    December 2015
    November 2015
    October 2015
    September 2015
    August 2015
    July 2015
    June 2015

Powered by Create your own unique website with customizable templates.