ஸிரியாவில் அஹ்லுஸ்ஸுன்னாக்கள் செறிந்து வாழ்ந்த இஸ்லாமிய வராலாற்றுச் சிறப்புமிக்க அலெப்போ (ஹலப்) நகரத்தினை அழித்து துவம்சம் செய்து அங்கிருந்த இலட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்துவிட்டு அலெப்போ வெற்றிகொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதுடன் அந்த வெற்றியினை ஈரானிய ஷீஆக்களும் அவர்களின்அடிவருடிகளும் கொண்டாடி வருகின்றனர்.
முஸ்லிம்களை அழிக்கும் ஸிரிய யுத்ததின் முக்கிய பங்காளி ஈரான். புவியியல் ரீதியாக தந்திரோபாய மற்றும் பிராந்திய மேலாதிக்க நோக்கத்தினை நிறைவேற்றும் நோக்கில் அஸாத்தின் ஷீஆ அரசாங்கத்தினை தக்கவைத்து தனது மேலாதிக்கத்தினை நிலைநாட்ட ஈரான் ஸிரியாவை பயன்படுத்தி வருகின்றது.
அத்துடன் ஈரான் அதன் பூகோள அரசியல் நலன்களுக்காக ஸிரியாவில் மோதல்களை தூண்டிவிட்டு அங்கு சண்டையில் நேரடியாக பங்கெடுத்துக் கொண்டது. ஸிரிய போரினை பற்றி புனைதல்களையும் பொய்களையும் அவிழ்த்துவிட்டு அங்கு போரை தொடர்ந்த ஈரானின் செயற்பாடானது அவர்களின் அகன்ற பாரசீக கனவின் ஒரு அங்கமாகவே நோக்கப்படுகிறது.
ஈரானிய தலைவர்கள், ஈரானிய மதகுருக்கள் மற்றம் அவர்களின் அனேகமான பாரசீக மொழி செய்தித்தாள்கள் அனைவரும் தங்களின் மிகவும் நெருங்கிய நண்பன் அஸாத் அலெப்போவை வெற்றி கொண்டுவிட்டார் என உணர்ச்சிமிகு கொண்டாட்டங்களை கொண்டாடி வருகின்றனர்.
அலெப்போவின் உண்மை நிலையை மறைத்து அங்குள்ள நிலைமை பற்றி ஈரானினால் முழுமையாக சோடிக்கப்பட்ட அதன் சொந்த கதைகளையே ஈரான் பரப்பி வருகின்றது. அவர்களின் செய்திகளில் அலெப்போ மக்களின் சோக நிலைமைகள், அங்கு பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை, அலெப்போ முழுமையாக அழிக்கப்பட்டமை பற்றி எந்த விடயங்களையும் உள்ளடக்காமல் அலெப்போவை வெற்றிகொண்டுவிட்டோம் என்று இனிப்புக்களை பறிமாறி இசைநிகழ்ச்சிகளை நடாத்தி அலெப்போ மக்களின் புதைகுழிகளின் மீது நின்று கொண்டு ஈரான் கும்மாளமடித்து வருகின்றது.
இங்கு அலெப்போ வெற்றி கொள்ளப்பட்டதாக ஷீஆக்கள் கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் ஈரானிய தலைவர்களின் பூகோள ரீதியான விருப்பங்கள் மற்றும் அவர்களின் பிராந்திய மேலாதிக்க இலக்குகள் வெற்றி கொள்ளப்பட்டுள்ளன என்தனாலேயே.
ஈரானின் முக்கிய செய்திப்பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாக அமைந்தமை “அலெப்போ விடுவிக்கப்பட்டுவிட்டது” என்தே. அலெப்போவினை கைப்பற்றியதால் அங்கு தமக்கு கிடைக்கும் இலாபங்கள் பற்றியே ஈரானிய தலைவர்களும் செய்திப்பத்திரிகைகளும் கலந்துரையாடுகின்றனர். அலெப்போவை வெற்றி கொண்டமை தொடர்பாக ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரூஹானி கூட ஸிரிய ஜனாதிபதி பஸார் அஸாத்துக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஆனால் ஈரானிய தலைவர்களோ, அதன் செய்தித்தாள்களோ அலெப்போவில் கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்ட பொதுமக்கள் பற்றி தெரிவிக்கவில்லை. அத்துடன் ஈரானிய ஷீஆ படையின் உதவியுடன் அஸாத்தின் அரச படையினர் அலெப்போ மக்கள் மீது கொடூரமான முறையில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள் என ஆயிரக்கணக்கான குடும்பங்களை கொலை செய்ததுடன், வீட்டுக்கு வீடு சென்று பொதுமக்களை சுட்டுக் கொன்றமை, பெண்களை கற்பழித்தமை மற்றும் பாடசாலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு அங்கிருந்த சிறுவர்களை கொலை செய்தமை உள்ளிட்ட “மனிதநேயத்தினை முழுமையாக கொலைசெய்த” அவர்களின் கொடூர செயல்கள் குறிப்பிடப்படவில்லை.
அஹ்லுஸ்ஸுன்னாக்களை அழித்து ஷீஆ ஆட்சியினை தக்கவைக்கும் ஈரானிய கனவு நிறைவேறிவிட்டது என்ற நினைப்பில் ஈரானிய ஷீஆக்கள் மற்றும் அவர்களின் அடிவருடிகள் அலெப்போ வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இன் ஷா அல்லாஹ் இஸ்லாத்தின் எதிரிகளின் கொண்டாட்டம் நீடிக்கப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.