தமிழ் ஷீஆ
Visit us on:
  • முகப்பு
  • ஆவணங்கள்
    • வீடியோ
    • ஆடியோ
    • புகைப்படங்கள்
    • நூல்கள்
  • செய்திகள்
  • கருத்துக்கள்
  • ஆக்கங்கள்
  • கேள்வி - பதில்

ஷீஆக்களின் கர்பலா கொமடி

29/7/2015

Comments

 
Picture
இமாம் அல்ஜாபர் அல்சாதிக் கூறினார் : “கஃபத்துல்லாஹ்விற்கு கீழேயுள்ள பூமி, மற்ற இடங்களைப் பார்த்து பெருமையடித்துக் கூறியதாம், “நான்தான் புனிதமான பூமிக்கு தகுதியுள்ளவன். ஆகவே எனக்கு மேலே கஃபா கட்டப்பட்டுள்ளது. இந்த புனிதமான அபயமளிக்கப்பட்ட என்னை நோக்கியே மக்கள் வருகிறார்கள்’. இதைக் கேட்டு அல்லாஹ் கோபமடைந்து கூறினான். “உனக்கும் கர்பலா மண்ணுக்கும் உள்ள மகத்துவம் எவ்வளவு என்றால் ஒரு ஊசியை கடல் நீரில் முக்கி எடுத்தால் அதில் எவ்வளவு இருக்குமோ அவ்வளவுதான் கஃபா மண்ணின் பெருமை. ஆனால் கடலளவு மகத்துவம் வாய்ந்தது கர்பலா மண். இதை புரிந்து கொண்டு அடக்கமாக நடந்து கொள். இனி இதுபோல் தொடர்ந்து பெருமையடித்தால் உன்னை அப்படியே நிலத்தில் ஆழ்த்தி நரக நெருப்பில் போடுவேன்’ என்று அல்லாஹ் எச்சரித்தான். – (காமில் அல்ஜியாரத் P-270, அல்மஜ்லிஸியின் “பிகார் அல்அன்வார்’ 101/190 – ஹக் அல் ஃயகீன் -P 145)

கர்பலா மகிமை இன்னும் முடியவில்லை. இமாம் அபூ அப்தில்லாஹ் சொன்னதாக அல்கலீனி அறிவிக்கிறார்:

“எவரொருவர் அரஃபா நாளன்று ஹுசைன் அவர்களின் கபுரடிக்கு செல்கிறார்களோ அவர்கள் மீது புராத் நதியின் நீர் பொழியப்படுகிறது. அவர்களின் ஒவ்வொரு காலடி சுவடுகளுக்கும் கணக்கற்ற ஹாஜிகளின் நன்மை கொடுக்கப்படு கிறது. இவர்களே வெற்றி பெற்றவர்கள்.”
(ஃபுரு அல்காஃபி 4/580)

ஷீஆ முகமது சாதிக் அல்சத்ர் கூறுகிறார் : “கஃபத்துல்லாஹ்வை விட அலி(ரழி) அவர்களின் அடக்கஸ்த்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மக்காவில் செய்யும் வணக்க வழிபாடுகளைக் காட்டிலும் மதிப்பு வாய்ந்தது. அலி (ரழி) அவர்கள் ஹுசைன்(ரழி) அவர்களை விடச் சிறந்தவர்கள், அதாவது கர்பலா கஃபாவை விடச் சிறந்தது என்பது போல்.”
(அல்மஸ்அலா(9)P 5 மின் கஸரத், அல் மஸாயீல்)

இமாம் அல் கூஃயீ தனது “மின்ஹஜ் அல் ஸாலீஹீன்’ நூலில் கூறுகிறார். “அலீ(ரழி) அவர்களின் பள்ளியில் தொழுவது இரண்டு லட்சம் நன்மைகள் பெற்றுத்தரும்; நபி(ஸல்) அவர்களின் பள்ளியில் தொழுதால் பத்தாயிரம் நன்மைகள் மட்டும் கிடைக்கும்.

ஈரான் ஷீஆ இமாம்கள் எந்தளவு மக்கா, மதீனாமேல் மதிப்பு வைத்துள்ளனர் என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். அல்அக்ஸா எனும் பைத்துல் முகத்தஸ் பள்ளியை யூதர்களிடமிருந்து விடுவிக்க இவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. இருப்பினும் கூட்டத்தோடு கூட்டமாக கோசம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Comments

    தகவல்கள்

    April 2017
    March 2017
    February 2017
    January 2017
    December 2016
    November 2016
    October 2016
    September 2016
    August 2016
    July 2016
    June 2016
    May 2016
    April 2016
    March 2016
    February 2016
    January 2016
    December 2015
    November 2015
    October 2015
    September 2015
    August 2015
    July 2015
    June 2015
    May 2015
    April 2015

    வகைகள்

    All

Powered by Create your own unique website with customizable templates.